ரஷியாவின் நதியை ரத்த நிறத்தில் மாற்றிய நிறுவனம் பொறுப்பேற்பு

உலகின் மிகப்பெரிய நிக்கல் உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்று, ரஷிய ஆர்க்டிக் பகுதியில் இருந்த நதி சிவப்பு நிறமாக மாறியதற்கு, அந்நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலையில் இருந்து வெளியான கசிவே காரணம் என தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP/GREENPEACW
Image caption சிவப்பு நிறமாக மாறியிருக்கும் நதி

கடந்த ஐந்தாம் தேதி கன மழை பெய்ததால், நடெஷ்டா தொழிற்சாலையில் இருந்த சுத்திகரிக்கும் அணை ஒன்று நிரம்பி டால்டிகன் நதியில் வழிந்தோடியதாக நோரில்ஸ்க் நிக்கல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும், மனிதர்களுக்கோ அல்லது வன உயிரினங்களுக்கோ ஆபத்து இல்லை என தெரிவித்துள்ளது.

கடந்த வாரம், நோரில்ஸ்க் அருகே இருந்த நதி சிவப்பு நிறத்தில் மாறிய புகைப்படங்கள் வெளிவரத் தொடங்கிய போது, அதனை அந்நிறுவனம் முழுமையாக நிராகரித்தது.

படத்தின் காப்புரிமை Google
Image caption ரஷியா வரைப்படம்

இதன் விளைவுகளை அவ்வளவு விரைவாக மதிப்பிட முடியாது என்கிறார் ரஷியாவின் கிரீன்பீஸ் அமைப்பை சேர்ந்த ஆர்வலர் ஒருவர்.

நோரில்ஸ்க் நிறுவனமானது இந்த சம்பவம் நடந்த பகுதியை உள்ளடக்கிய ஒட்டுமொத்த டேமைர் தீபகற்பம் முழுவதும் செயல்படுவதற்கான உரிமை பெற்றிருப்பதாகவும், அதன் தொழிற்சாலைகள் ஏற்படுத்தி வரும் மாசுக்களை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொழிற்சாலை பகுதியிலிருந்து குழாய் வழியாக கசிந்த ரசாயன மாசுகள் நதியின் நிறத்தை மாற்றி இருக்கக்கூடும் என்று சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த நிறுவனத்தின் பாதுகாப்பு அம்சங்களில் குறைப்பாடு உள்ளதாக உள்ளூரில் உள்ள சில குழுக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்