சீனா: தேர்தல் மோசடி குற்றச்சாட்டில் 45 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம்

சீனாவின் பொம்மை நாடாளுமன்றம் என்று அழைக்கப்படும் குறைந்த அதிகாரம் கொண்ட நாடாளுமன்றம், ஒரு மாகாணத்தின் சுமார் பாதியளவு உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்துள்ளது.

சீன நாடாளுமன்றம்

பட மூலாதாரம், பிபிசி

படக்குறிப்பு,

சீன நாடாளுமன்றம் (கோப்புப் படம்)

தேர்தலில் மோசடி செய்து உறுப்பினர் பதவியைப் பெற்றனர் என தெரியவந்த பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுருக்கமான அறிவிப்பை வெளியிட்டுள்ள சீன அரசின் செய்தி முகமை, லியோநிங் மாகாணத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பிரமுகர்களில், 45 பேர் தேர்தலில் மோசடி செய்ததாக தெரிவித்துள்ளது.

அதில் வேறு தகவல்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

சீனாவின் சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுவாக தங்களது பகுதியில் பிற கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.