அமெரிக்க 'இனவெறி'க்கு கால்பந்து வீரர் எதிர்ப்பு - தேசிய கீதம் இசைக்கும் போது எழுந்து நிற்க மறுப்பு

அமெரிக்க கால் பந்து விளையாட்டுப் போட்டிப் பருவத்தில் தொடங்கிய முதல் போட்டியில், சான் பிரான்ஸிஸ்கோ நகரின் 'ஃபார்ட்டி நைனர்ஸ்' கிளப்பைச் சேர்ந்த வீரர் கோலின் கேப்பர்நிக் ,போட்டியின் போது அமெரிக்க தேசிய கீதம் இசைக்கப்படுகையில், எழந்து நிற்காமல், மண்டியிட்டு , அமெரிக்காவில் நிலவும் இனவெறி, சமத்துவமின்மை மற்றும் போலிஸ் வன்முறைக்கெதிராக தனது எதிர்ப்பைத் தொடர்ந்து வெளிப்படுத்தினார்.

படத்தின் காப்புரிமை Denis Poroy
Image caption 'நிறவெறி'க்கு எதிர்ப்பு - கோலின் கேப்பர்நிக்

கறுப்பினரான ( ஆப்ரிக்க அமெரிக்கர்) கேப்பர்நிக்கும் அவரது குழு சக வீரரன, எரிக் ரீய்டும் அமெரிக்க தேசியகீதமான, 'ஸ்டார் ஸ்பேங்கிள்ட் பேனர்' பாடல் வயலினில் இசைக்கப்பட்டு, அமெரிக்காவின் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டபோது , எழுந்து நிற்க மறுத்துவிட்டனர்.

சில கால்பந்து ரசிகர்கள் அவர்களை எழந்து நிற்க சொல்லி கூக்குரலிட்டனர் ஆனால் மற்ற சிலரோ , இந்த போட்டி துவங்குமுன்னரான பருவத்தில் சில கால்பந்துவீரர்கள் தொடங்கியுள்ள இந்த எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவாக கருத்தைத் தெரிவித்தனர்.

வேறு சில விளையாட்டு வீரர்கள் கைமுஷ்டிகளை மடக்கி உயர்த்தி, 1968ல் மெக்சிகோ சிட்டியில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் போது அமெரிக்க ஓட்ட பந்தய வீரர்கள், ஜான் காரலோஸ் மற்றும் டோமீ ஸ்மித் ஆகியோர் செய்த வணக்க சைகையை நினைவுகூர்ந்தனர்.

தொடர்புடைய தலைப்புகள்