ஐ.எஸ். அமைப்பின் சார்பில் ஜெர்மனியில் தாக்குதல் திட்டம்: 3 சிரியா நாட்டு நபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது

வடக்கு ஜெர்மனியில் பல வீடுகளில் தீவிர சோதனை நடத்திய 200 போலிஸ் அதிகாரிகள், இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பிற்காக தாக்குதல் நடத்த தயாரிப்பு பணிகளை மேற்கொண்டதாக, புலம் பெயர்ந்த மூன்று சிரியா நாட்டு பிரஜைகளை, சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption சமீபமாக, தெற்கு ஜெர்மனியில் தொடர் தாக்குதலில் 10 நபர்கள் இறந்தனர். அந்த சம்பவம் நடந்த இரண்டு மாதங்களுக்குள், இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்க வழக்கறிஞர்கள் , கைதான இளைஞர்கள் கடந்த ஆண்டு ஜெர்மனிக்கு வந்ததாக தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் ஐரோப்பாவிற்கு பயணம் செய்ய தாங்களாகவே முன்வந்தனர் என்றும், தாக்குதல் நடத்த ஐ.எஸ்.அமைப்பின் ஆணைக்காக காத்திருந்தனர் என்றும் விசாரணை அதிகாரிகள் கருதுகிறார்கள்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஐ.எஸ். அமைப்பினால் ஈர்க்கப்பட்டு, ஜெர்மனியில் நடந்த முதல் தாக்குதல் என்று கருதப்பட்ட தாக்குதலை, நடத்தியவர்கள் கடந்த ஆண்டு ஒரு மில்லியன் அல்லது அதற்கும் மேற்பட்டு ஜெர்மனிக்குள் வந்த தஞ்சக் கோரிக்கையாளர்களில் இரு நபர்கள் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.