ஒருபால் உறவுக்கு எதிரான அமெரிக்க கிறிஸ்தவ மதபோதகருக்கு தென் ஆப்ரிக்கா தடை

Image caption ஒருபால் உறவுக்கு தென் ஆப்ரிக்க அரசியல் சாசனம் ஆதரவு

ஒருபால் உறவு குறத்து கடும் விமர்சனங்களை வெளிட்ட சர்ச்சைக்குரிய அமெரிக்க கிறிஸ்தவ மதபோதகர் ஒருவருக்கு தென் ஆப்ரிகாவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஃபெயித்ஃபுல் வோர்ட் பாப்டிஸ்ட் தேவாலயத்தைச் சேர்நத ஸ்டீவன் ஆண்டர்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் துவேஷத்தை தூண்டும் வகையில் பேசியதால், அவர்களுக்கு நுழைவு அனுமதி மறுக்கப்பட்டது என தென் ஆப்ரிக்காவின் உள்துறை அமைச்சர் கூறுகிறார்.

அந்த தேவாலயத்தின் இணையதளத்தில், ஒருபால் உறவு வெறுக்கத்தக்க சாத்தானின் செயல் என்றும், அதற்கு மரண தண்டனை விதிக்கபபடவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தென் ஆப்ரிக்க அரசியல் சாசனம், ஒருபால் உறவுக்காரர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் தாராளவாதக் கொள்கை கொண்டது.