சிரியாவில் போர் நிறுத்தம், ஆனாலும் பல கேள்விகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சிரியாவில் போர் நிறுத்தம், ஆனாலும் பல கேள்விகள்

சிரியாவில் போரினால் பாதிக்கப்பட்டு முற்றுகைக்குள்ளாகியிருக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்குடன் அமெரிக்கா மற்றும் ரஷ்ய தலையீட்டுடன் அங்கு தற்போது போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது.

எனினும் இந்தப் போர் நிறுத்த உடன்பாட்டை சவுதி அரேபியா ஆதரவுடன் செயல்படும் ஒரு ஆயுதக் குழு உட்பட பலர் நிராகரித்துள்ளனர்.

இதேவேளை தீவிரவாதிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை தொடரும் என நாட்டின் அதிபர் பஷார் அல் அஸத் சூசகமாக உணர்த்தியுள்ளார்.

போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ள சூழலில், உதவி வழங்கும் வாகனங்கள் அலெப்போ நகரை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளன.

இது குறித்த பிபிசியின் சிறப்பு காணொளியை இங்கே பார்க்கலாம்.