``பிரிட்டன் வெளியேறுவதால் ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலத்துக்கு ஆபத்து இல்லை''

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற உள்ளதால் ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலம் ஆபத்தில் இல்லை என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஷான் க்லோட் யொன்கர் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை பிபிசி
Image caption ஷான் க்லோட் யொன்கர் (கோப்புப் படம்)

பிரிட்டனின் வாக்கெடுப்பு முடிவுக்குப் பிறகு முதல்முறையாக ஐரோப்பிய ஒன்றியத்தில், ஒன்றியத்தின் நிலவரம் குறித்து, உரையாற்றிய யொன்கர், அதிகரித்து வரும் தேசியவாதத்திற்கு எதிராக போரிடும்படி மீதமுள்ள 27 உறுப்பு நாடுகளையும் வலியுறுத்தியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் சிதறுண்டுபோவது அங்கு ஜனரஞ்சக அரசியல் வெகு வேகமாகப் பரவுவதற்கு இடமளிக்கிறது என்றார் அவர்.

ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் தேச-அரசுகள் என்ற அமைப்புகளின் நலன்களுக்கு அடிபணியக் கூடாது என்றும் அவர் கூறினார்.

அடுத்த ஐந்து வருடங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் முதலீட்டை இரட்டிப்பாக்க யொன்கர் திட்டங்களை முன்வைத்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பொது பாதுகாப்பு படை ஒன்றை உருவாக்கவும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கென ஒரு வெளியுறவு அமைச்சர் பதவியை உருவாக்கவும் யோசனைகளை முன் வைத்துள்ளார்.