உருவாக இருக்கும் புதிய கூட்டணி: மான்சாண்டோ பேயர் நிறுவனம் ஒப்பந்தம்

அமெரிக்காவின் விதைகள் மற்றும் உரத்தயாரிப்பு பெரு நிறுவனம் மான்சாண்டோவை வாங்க, ஜெர்மனியின் மருந்து தயாரிப்பு நிறுவனமான பேயர் நிறுவனம், 66 பில்லியன் டாலர்களை தர முன்வைத்திருக்கும் கேட்பை மோன்சாண்டோ நிறுவனம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption இந்த ஒப்பந்தம்தான், வேளாண் -ரசாயனத்துறையில் நடந்து வரும், நிறுவன இணைப்புகளில் , மிகச்சமீபத்திய இணைப்பு ஆகும்.

இந்த ஒப்பந்தம் குறித்த சில அம்சங்கள் பேச்சுவார்த்தையில் உள்ளன எனவும் இறுதித் தொகை மாறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன;

ஆனால் இப்போது இருக்கும் நிலையில், இதுதான் மிகப்பெரிய அளவில் பணம் கொடுத்து வாங்கும் ஒப்பந்தமாக இருக்கும்.

மான்சாண்டோ நிறுவனம் மரபணு மாற்று விதை பொருட்களுக்கு புகழ்பெற்றது; மேலும் பேயர் நிறுவனம், பூச்சிக் கொல்லி மற்றும் பயிர் ரசாயனங்கள் துறையில் முன்னனியில் உள்ளதால், இரண்டு புதிய நிறுவனங்களும் சேர்ந்து மரபணு மாற்று விதை தொழில்நுட்பத்தில் உலகளவில் ஒரு புதிய பெருநிறுவனத்தை உருவாக்கும்.

இந்த ஒப்பந்தம் அடுத்த வருட இறுதிக்குள் நிறைவேற்றப்படும் என்று பேயர் நிறுவனம் தெரிவித்துள்ளது.