புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் : ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இன்று விவாதம்

ஆஸ்திரேலியாவில் உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்து இன்று (வியாழக்கிழமை) மாலை, அந்நாட்டு நாடாளுமன்றம் விவாதிக்கவுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப் படம்

தீவிரவாத செயல்களில் ஈடுபடக்கூடும் என்று சந்தேகிக்கப்படும் பதின்பருவ நபர்களை கடுமையாக கண்காணிக்கவும் மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாத அளவு சமூகத்துக்கு அதிக ஆபத்தினை உண்டாக்க கூடும் என்று கருதப்படும் தண்டனை பெற்றுள்ள தீவிரவாதிகளின் காலவரையற்ற தடுப்புக்காவலை உறுதி செய்யவும் இந்த புதிய சட்டவரைவு அனுமதியளிக்கிறது.

இந்த நடவடிக்கைகள் அளவுக்கு அதிகமானவை என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சுதந்திரங்களை குறைக்க அரசு முயற்சி செய்கிறது என்று ஆஸ்திரேலிய மனித உரிமை ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்