பாகிஸ்தானில் ரயில் விபத்து: 4 பேர் உயிரிழப்பு

மத்திய பாகிஸ்தானில், பயணிகள் ரயிலொன்றும், சரக்கு ரயிலொன்றும் மோதிக் கொண்டதில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption பாகிஸ்தானில் ரயில் விபத்து:

மேலும், இந்த விபத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த முல்தான் நகருக்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயில் தண்டவாளப் பாதையில் சென்று கொண்டிருந்த ஒருவர் மீது மோதியவுடன் சரக்கு ரயிலின் ஓட்டுநர் ரயிலை நிறுத்தியதாகவும், அப்போது கராச்சி நோக்கி சென்ற ஒரு விரைவு ரயில் சரக்கு ரயிலின் மீது மோதி விட்டதாகவும் உள்ளூர் ஊடக தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த விபத்தினால், ரயிலின் நான்கு பெட்டிகள் தலைகீழாக கவிழ்ந்துள்ளன.