ஜப்பான் எதிர்கட்சியின் முதல் பெண் தலைவர்

ஜப்பானின் எதிர்கட்சியான ஜனநாயகக் கட்சி, முதன்முறையாக பெண் ஒருவரை தலைவராக தேர்ந்தெடுத்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty
Image caption ரென்ஹோ (கோப்புப் படம்)

ரென்ஹோ என்னும் ஒரே பெயரைக் கொண்ட அவர், தனது இரட்டைக் குடியுரிமை சர்ச்சையை தாண்டி அமோக வெற்றி பெற்றுள்ளார்.

அவர் ஜப்பானிய தாய்க்கும் தைவான் தந்தைக்கும் பிறந்தவர்

முன்னாள் நீச்சலுடை மாடல் அழகி மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளரான இவர், தடுமாறிக் கொண்டிருக்கும் தனது ஜனநாகக் கட்சியை புரட்சிகரக்கட்சியாக மாற்றுவதாக உறுதியளித்திருந்தார்.

ரென்ஹொ, ஜப்பான் அரசியலில் பிரபலமாகியிருக்கும் மூன்றாவது பெண் ஆவார்

டோக்கியோவின் மேயர் மற்றும் ஜப்பானின் பாதுகாப்பு செயலர் ஆகியோரும் பெண்கள்தான்.