சிரியா: போர் நிறுத்தம் தொடங்கிய போதிலும் உதவிகளை விநியோகிக்க தடை

  • 15 செப்டம்பர் 2016

சிரியாவில் கடந்த திங்களன்றே போர் நிறுத்தம் தொடங்கிய போதும் அங்குள்ள லட்சக்கணக்கான பொது மக்களுக்கு உதவிகள் விநியோகிக்கப்படுவதை சிரியா அரசு தடுப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption சிரியாவில் திங்களன்று போர் நிறுத்தம் தொடங்கியது

உதவிகள் வழங்குவதற்காக ஐ.நாவிடம் உறுதியளிக்கப்பட்ட அனுமதிகளை சிரியா அரசு தரவில்லை என சிரியாவுக்கான ஐநா மன்ற சிறப்புத் தூதர் ஸ்டபன் டி மிஸ்டுரா தெரிவித்துள்ளார்.

நன்கு உண்டு கொழுத்த வயது வந்த ஆண்கள், பசியில் இருக்கும் குழந்தைகளுக்கு உதவுவதில் தடையை உருவாக்குவதை நிறுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது என்று மிஸ்டுரா சாடியுள்ளார்.

இருப்பினும் முற்றுகையிடப்பட்ட சிரியா நகரமான அலெப்போவில் உதவிகளை வழங்குவதற்கான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதால், வெள்ளியன்று அங்கு உதவிகளை விநியோகிக்க முடியும் என ஐ.நா நம்புகிறது.

முன்னதாக அலெப்போவிற்கு செல்லும் முக்கிய பாதைகளில் சிரியா மற்றும் போராளிகளின் படைகள் திரும்பப் பெறப்பட்டுவிட்டன என ரஷியா தெரிவித்துள்ளது.