நிமோனியா சிகிச்சைக்கு பிறகு மீண்டும் களமிறங்கும் ஹிலரி

  • 15 செப்டம்பர் 2016

நிமோனியாவால் பாதிக்கப்பட்ட பின்சிகிச்சைக்கு பிறகு ஹிலாரி கிளிண்டன் மீண்டும் தனது தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபடவுள்ளார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption ஹிலரி கிளிண்டன் (கோப்புப் படம்)

ஞாயிறன்று நியூயார்க்கில் நடைபெற்ற 9/11 தாக்குதல் நினைவு நிகழ்ச்சியிலிருந்து உடல்நிலை சரியில்லாமல் பாதியில் வந்ததற்கு பிறகு முதல்முறையாக வடக்கு கரோலினாவில் நடைபெறவுள்ள பேரணியில் உரையாற்றவுள்ளார் ஹிலரி.

அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளாரான ஹிலரி, நிமோனியாவிலிருந்து மீண்டு வருகிறார் என்றும் தற்போது ஆரோக்கியமாகவும், அதிபராக பணியாற்ற அனைத்து உடல் தகுதிகளுடன் இருப்பதாகவும் ஹிலரியின் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஹிலரியின் உடல்நிலை குறித்த தொடர்ச்சியான செய்திகளுக்கு பிறகு, இந்த பேரணியில் அவரின் நடவடிக்கைகள் கவனமாக கண்கானிக்கப்படும் என பிபிசியின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்