சிரியாவில் உதவி விநியோகம் நடைபெறவில்லை: ஐ.நா அதிகாரிகள் விரக்தி

சிரியாவில் திங்களன்றே போர் நிறுத்தம் தொடங்கிய போதும், அங்கு மனிதாபிமான உதவிகளை விநியோக்க முடியாமல் இருக்கும் நிலை குறித்து, தங்கள் கோபத்தையும் விரக்தியும் ஐ.நா அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption சிரியாவில் போர் நிறுத்தம் தொடங்கிய பின்னும் உதவி விநியோகம் தொடங்கப்படவில்லை

சிரியாவிற்கான ஐ.நாவின் சிறப்பு தூதர் ஸ்டபன் டி மிஸ்டுரா, சிரியா அரசு தங்களுக்கு வழங்குவதாக உறுதியளித்த அனுமதியை வழங்கவில்லை என தெரிவித்துள்ளார்.

மற்றொரு ஐ.நா., அதிகாரி ஜான் ஈகலாண்ட், எதிர்தரப்பு அரசியல்வாதிகள் மற்றும் போராளிக்குழுக்களையும் குற்றம் சாட்டியுள்ளார்.

போராளிகளின் வசமிருக்கும் கிழக்கு அலெப்போவிலுள்ள உள்ளூர் கவுன்சில், அரசியல் விளையாட்டுகளை நிகழ்த்துவதாகவும், அவர்கள் கோட்டு, சூட்டு அணிந்த ஆனால் கலஷ்னிக்கோவ் துப்பாக்கிகளை வைத்துள்ளவர்கள் என்றும், உதவிகள் விநியோகிக்கப்படுவதை தடுக்கின்றனர் எனவும் குற்றம் சாட்டியுள்ளார் ஈகலாண்ட்.

மற்றொரு முற்றுகையிடப்பட்ட நகரான மடயாவில் மக்கள் பட்டினியில் இருக்கும் நிலை தொடங்கிவிட்டதாகவும் மேலும் அங்கு மூளைக்காய்ச்சல் பரவி வருவதாகவும் ஈகலாண்ட் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்