காணாமல் போன விமானப்படை விமானத்தில் இருந்தவர்கள் உயிர் தப்ப வாய்ப்பு குறைவு: இந்திய விமானப்படை

எட்டு வாரங்களுக்கு முன்பு காணாமல் போன ஒரு இந்திய விமானப் படை விமானத்தில் இருந்தவர்கள், உயிர் தப்பியிருப்பதற்கு வாய்ப்பு குறைவு என்று அவர்களின் குடும்பத்தினரிடம் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. அந்த விமானம் கிளம்பிய சில மணி நேரத்தில் காணாமல் போனது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption காணாமல் போன ஏ என்- 32 ரக விமானம் (AN -32) எட்டு பொது மக்கள் உட்பட 29 நபர்களை சுமந்து சென்றது.

அந்த ஏ என்- 32 ரக விமா னம் (AN -32) எட்டு பொது மக்கள் உட்பட 29 நபர்களை சுமந்து சென்றது.

சென்னையில் இருந்து அந்தமான் தீவிற்கு கிளம்பிய அந்த விமானம், எந்தவொரு அபாய சமிக்ஞைகளும் தராமல் காணமால் போனது.

இந்த விமானத்தை கண்டுபிடிக்க தேடுதல் பணிகளில் 17 கப்பல்கள், ஒரு நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் 23 விமானங்கள் ஈடுபட்டன.

தொலைதூரத்தில் இருந்து இயக்கப்படும் கப்பல்கள் மூலம், தொடர்ந்து கடல் படுகையில் தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன.