தன்சானியாவில் சர்வாதிகாரம் நிலவுவதாக எதிர்கட்சியின் தலைவர் புகார்

தன்சானியா நாட்டில் முக்கிய எதிர் கட்சியின் தலைவர்களில் ஒருவர், தனது நாட்டில் சர்வாதிகாரம் என்று தான் அழைக்கும் சக்திகளை எதிர்த்து போரிட்டுவருவதாக தெரிவித்துள்ளார்.

Image caption தன்சானியாவில் தவறான செயல்கள் நடக்கின்றன என எதிர்கட்சியின் தலைவர் எட்வார்ட் லோவாசா என்று தெரிவித்துள்ளார். தன்சானியாவின் தார் எஸ் ஸலாம் என்ற பகுதி (கோப்புப்படம்)

கடந்த ஆண்டில் அதிபர் தேர்தலில் ஜான் மாகுப்யூலிக்கு அடுத்ததாக வந்த எட்வார்ட் லோவாசா, பி.பி சியிடம் பேசுகையில், மாகுப்யூலியின் ஆட்சியில் தன்சானியாவில் தவறான செயல்கள் நடக்கின்றன. அந்த விவகாரங்கள் சமாளிக்கப்பட வேண்டிய தேவை உள்ளது என்றார்.

கடந்த மாதம் முக்கிய எதிர்க்கட்சி, எதிர்ப்பு தெரிவிப்பதற்கு ஒரு நாள் வேண்டும் என அழைப்பு விடுத்தது. ஆனால் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அரசு தரப்பிற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே மத்தியஸ்தம் செய்துவந்த மத தலைவர்களின் ஆலோசனையின் பேரில் போராட்டங்கள் தள்ளிவைக்கப்பட்டன என்று லோவாசா பிபிசியிடம் தெரிவித்தார்.