சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சுற்றுச்சூழல் அழிப்பு, நில அபகரிப்பு குற்றங்களை விசாரிக்க முடிவு

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், போரின் போது இழைக்கப்பட்ட குற்றங்களில் இருந்து, தனது அதிகார வரம்பில் , அமைதிக் காலத்தின் போது நிகழ்த்தப்படும் சுற்றுச்சூழலை அழிப்பது மற்றும் நில-அபகரிப்பு போன்றவற்றையும் கருத்தில் கொள்ள செய்ய திட்டமிட்டுள்ளது .

படத்தின் காப்புரிமை ICC
Image caption சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முதல் முறையாக சுற்றுசசூழல் அழிப்பு, நில-அபகரிப்பு குற்றங்களை விசாரிக்க முடிவு செய்துள்ளது

இத்தகைய குற்றங்களை ஒரு சர்வதேச நீதிமன்றத்தின் அதிகார வரம்பின் கீழ் கொண்டு வருவது இது முதல் முறையாக இருக்கும்.. இதற்கு ஆதரவான பிரச்சாரகர்கள் இந்த நடவடிக்கை ஒரு வரலாற்று சிறப்புவாய்ந்த ஒன்று என தெரிவித்துள்ளனர்.

தற்போது தனியார் முதலீட்டாளர்கள் ரகசியமாக ஏழை நாடுகளில் நிலங்களை வாங்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இதனால், உள்ளூர் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு கட்டாயமாக வெளியேற்றப்படும் நிலை உள்ளது.

ஐசிசிக்கு சம்பந்தப்பட்ட நாடுகளின் ஒத்துழைப்பு தேவைப்படும், ஆனால் இந்த நடவடிக்கை இது போன்ற செயல்களை தடுக்கும் ஒரு வழியாக செயல்பட முடியும் என்று பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

தொடர்புடைய தலைப்புகள்