ஒபாமா அமெரிக்காவில் பிறந்தவர் என டிரம்ப் ஏற்பு

அதிபர் பராக் ஒபாமா அமெரிக்காவில் பிறந்ததாக இப்போது டொனால்ட் டிரம்ப் நம்புவதாக அவருடைய பிரசார அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஒபாமாவின் குடியுரிமை பற்றி முன்னதாக டிரம்ப் அடிக்கடி கேள்விகளை எழுப்பியுள்ளார்

ஒபாமா அமெரிக்க எல்லைக்குள் பிறந்ததை மீண்டும் ஏற்று கொள்ளாமல் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டிரம்ப் வழங்கிய பேட்டிக்கு சில மணி நேரங்களுக்கு பின்னர் இந்த அறிக்கை வந்துள்ளது.

பாராக் ஒபாமா அமெரிக்காவின் ஹவாய் தீவில் பிறக்கவில்லை. எனவே அவர் அதிபர் பதவியில் இருக்க தகுதியற்றவர் என்று வாதிடுகின்ற "பர்தர் இயக்கம்" என்று கூறப்படும், குழுவை நிறுவியவர் டொனால்ட் டிரம்ப்.

இந்த சர்ச்சையை தணிக்கும் விதமாக, பரப்புரையின் தலைகீழ் திருப்பமாக டிரம்பின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை அமைவதாக வாஷிங்டனில் இருக்கும் பிபிசி செய்தியாளர் தெரிவித்திருக்கிறார்.