ஐரோப்பிய ஒன்றியம் சிக்கலான சூழ்நிலையில் உள்ளது: ஜெர்மனி அதிபர் ஏங்கெலா மெர்கெல்

ஐரோப்பிய ஒன்றியம் மிகவும் ஒரு சிக்கலான சூழ்நிலையில் உள்ளது மற்றும் அதன் பிரச்சனைகளை ஒரே கூட்டத்தில் தீர்க்கமுடியாது என ஜெர்மன் அதிபர் அங்கேலா மெர்கெல் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption ப்ரேடிஸ்லாவாவில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கான மாநாட்டில் ஜெர்மன் அதிபர் அங்கேலா மெர்கெல் பங்கேற்றார். (கோப்புப்படம்)

இந்தக் கருத்தை ஸ்லோவாகியாவின் தலைநகர் ப்ரேடிஸ்லாவாவில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கான உச்சி மாநாட்டிற்கு வந்தபோது மெர்கெல் தெரிவித்தார்.

ஒன்றிய தலைவர்கள் பாதுகாப்பு விவகாரங்கள், தீவிரவாதத்தை எதிர்த்து போரிடுவது மற்றும் பாதுகாப்பிற்காக ஒத்துழைப்பது போன்றவற்றில் முன்னேற்றத்தை நிரூபிக்கவேண்டிய தேவை உள்ளது என்றார் மெர்கெல்.

ஸ்லோவாகியாவின் பிரதமர் ராபர்ட் பிகோ பேசுகையில், ஒன்றிய தலைவர்கள் மிகவும் நேர்மையான விவாதத்தை நடத்தவேண்டிய தேவை உள்ளது என்றார்.

மேலும், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்ற முடிவின் தாக்கத்தில் இருந்து மீண்டுவர தங்களது ஒற்றுமையைக் காட்டவேண்டும் என்றார்.