அலெப்போ நகரின் முக்கிய சாலையில் ரஷிய படைகள் நிறுத்தம்

முற்றுகையிடப்பட்ட மற்றும் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள அலெப்போ நகரின் முக்கிய சாலையில், ரஷிய படைகள் நிறுத்தப்பட்டுள்ளன என பிரிட்டனில் இருந்து இயங்கும் சிரிய நாட்டு செயற்பாட்டாளர்கள் குழுவிடம் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption போரினால் சிரிய நாட்டு மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். சிரிய நாட்டு பிரஜை தப்பித்து வெளியேறும் காட்சி. (கோப்புப்படம்)

சிரியாவின் மனித உரிமைகள் கண்காணிப்பு குழுவின் பேச்சாளர் , காஸ்டெல்லோ சாலையில் சிரிய அரசின் படைகளுக்கு பதிலாக ரஷியாவின் படைகள் அங்கு நிற்கின்றன என்றார்.

ஆனால் இது குறித்து பக்கசார்பற்ற வகையில் உறுதிப்படுத்தப்படவில்லை.

அரசு படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுவதை அலெப்போவில் இருக்கும் ஆர்வலர் ஒருவர் மறுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

தற்போதைய போர் நிறுத்த உடன்பாட்டின்படி, அலெப்போ நகரில் மனிதாபிமான உதவிகளை கொண்டு செல்லும் வாகனங்கள் செல்வதற்காக அரசு ஆதரவு படைகள் மற்றும் கிளிர்ச்சியாளர்கள் பின்வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.