போர் நிறுத்த ஒப்பந்தம் தொடங்கிய பிறகும் சிரியாவில் தொடர் தாக்குதல்

அமெரிக்கா மற்றும் ரஷியாவும் ஒப்புக் கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தம் தொடங்கி நான்கு நாட்கள் கழிந்த பிறகு, சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் ஒரு புறநகர் பகுதியில் சண்டைகள் நடப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை AFP/Getty Images
Image caption போர் நிறுத்த ஒப்பந்தம் தொடங்கிய பிறகும் சிரியாவில் தொடரும் தாக்குதலால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சிரியாவில் போரில் சேதமடைந்த கட்டிடம். (கோப்புப்படம்)

கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள ஜோபார் மாவட்டத்தில், சிரிய அரச படைகளுக்கும் எதிர்தரப்பு படைகளுக்கும் இடையில் ராக்கெட் தாக்குல் மற்றும் மோதல்கள் நடக்கின்றன என்றும், இரு தரப்பினரும் போர் நிறுத்த உடன்பாட்டை மீறியதற்காக, ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதாக செய்திகள் கூறுகின்றன.

இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் சபையின் உதவியாளர்கள் தங்களால் சிரிய நகரான அலெப்போவில் உதவி பொருட்களை வழங்க முடியவில்லை என்று விரக்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் உதவி முகமையின் பேச்சாளர், சிரியா- துருக்கி எல்லையில் இருந்து அலெப்போவுக்கு, உதவி பொருட்களை கொண்டுள்ள வண்டிகள் செல்வதற்கான பாதுகாப்பான பாதை இதுவரை திறக்கப்படவில்லை என தெரிவித்தார்.