ஒரு நாள் நடந்த ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் பேச்சுவார்த்தை

ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் ஒன்றியத்தின் எதிர்காலம் குறித்த பேச்சுவார்த்தைகளில் ஒரு நாளை கழித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption டச்சு நாட்டு பிரதமர் மார்க் ருட்டே எப்போதுமே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் வேறுபாடுகள் இருந்தன என்றார். மார்க் ருட்டே (கோப்புப்படம்)

ஸ்லோவோக்கியாவில் நடக்கும் இந்த பேச்சுவார்த்தையில் பிரிட்டன் பங்கேற்கவில்லை . மற்ற 27 நாடுகளின் தலைவர்கள் , ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் விலக எடுத்த முடிவை அடுத்து, ஒன்றியத்தின் மீது நம்பிக்கையை மீட்டெடுக்கும் முயற்சியில் ஒற்றுமையாக இருப்பது போன்ற ஒரு காட்சியை அளிக்க முயற்சி செய்கிறார்கள்.

அகதிகள் நெருக்கடி மற்றும் பொருளாதாரம் ஆகிய விவகாரங்களில் பலத்த பிளவுகள் உள்ளன.

டச்சு நாட்டு பிரதமர் மார்க் ருட்டே பேசுகையில், எப்போதுமே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் வேறுபாடுகள் இருந்தன என்றார். மேலும், அவற்றை சரிசெய்யவது தான் முக்கியம் என்றார்.

தொடர்புடைய தலைப்புகள்