நைரோபி தேசிய பூங்காவில் ரயில்பாதை அமைக்க எதிர்ப்பு

கென்யாவில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் நைரோபி தேசிய பூங்காவை சுற்றி வாழும் மக்கள் அந்த பூங்கா வழியாக ரயில்பாதை அமைக்க திட்டமிட்டுள்ளதற்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

Image caption கென்யா வனப்பகுதி

இந்த ரயில்வே திட்டம், தலைநகர் நைரோபியை கடற்கரை நகரான மொம்பாசாவை இணைக்கும் ஒரு முதன்மையான திட்டம்.

சமீபமாக , அரசாங்கம் வனவிலங்குகளுக்கு ஏற்படும் இடையூறுகளைக் குறைக்க பூங்காவின் பகுதிகளில் ஒரு பாலத்தை அமைக்க முடிவெடுத்தது.

தங்களது மனு மற்றும் மாற்று வழிக்கான திட்டங்களோடு போராட்டக்காரர்கள், கென்யாவின் வனத்துறை சேவை அலுவலகங்களுக்கு அணிவகுத்து சென்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்