பெண் போலிஸ் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற பாலஸ்தீனர் கொலை

ஒரு பெண் போலிஸ் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற ஒரு பாலஸ்தீனர், அந்த அதிகாரியால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று இஸ்ரேல் போலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை ASSOC PRESS
Image caption பாலஸ்தீனர்கள் மற்றும் இஸ்ரேலியர்களுக்கு இடையில் மோதல் சம்பவங்கள் தொடர்கின்றது.ஜெருசலேம் நகரம். (கோப்புப்படம்)

இந்த தாக்குதல் கிழக்கு ஜெருசலேமின் பழைய நகரத்தின் நுழைவு பகுதியில் நடந்தது.

அந்த நபர் ஜோர்டன் பகுதிவாசி என்றும் அவர் ஜோர்டானிய மற்றும் பாலஸ்தீனிய அடையாள ஆவணங்களை வைத்திருந்தார் என்றும் ஒரு போலிஸ் துறை பேச்சாளர் குறிப்பிட்டார்.

பாலத்தீனர்களால் சமீபமாக நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களில் 30க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதே காலத்தில் 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீன தாக்குதல்தாரிகள் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய தலைப்புகள்