சிரியாவில் போர் நிறுத்தத்தை தீவிரவாதக் குழுக்கள் தவறாகப் பயன்படுத்துவதாக புதின் புகார்

  • 17 செப்டம்பர் 2016

சிரியாவில் அரசுக்கு எதிரான படைகள், அமெரிக்கா மற்றும் ரஷியா வகுத்தளித்துள்ள, பலவீனமான ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் மீண்டும் ஒன்று சேர முயற்சி செய்வதாக, அதிபர் புதின் குற்றம் சாட்டியுள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP/Getty Images
Image caption சிரியாவில் ரேய்ஹென்லி என்று பகுதியில் போரினால் சேதமடைந்த ஒரு கட்டிடம். (கோப்புப்படம்)

புதின் பேசுகையில், சிரிய ராணுவம் போர் நிறுத்த உடன்பாட்டை முழுமையாக மதிப்பதாகத் தெரிவித்தார். ஆனால் தீவிரவாத குழு என்று அவர் அழைக்கும் குழுக்கள்-முன்னாள் அல்-நுஸ்ரா முன்னணி, நான்கு நாள் போர் நிறுத்தத்தை தவறாக பயன்படுத்துவதாக தெரிவித்தார்.

அமெரிக்காவும் ரஷியாவும் போர் நிறுத்த ஒப்பந்தம் நீடிக்க வேண்டும் என்று கூறுகின்றன. ஆனால் போர் நிறுத்த ஒப்பந்தம் நீடிப்பதற்கான போதுமான வேலைகள் செய்யப்படவில்லை என்று அவர்கள் பரஸ்பரம் குற்றம் சாட்டுகின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்