க்ரைமிய மக்கள் முதல்முறையாக வாக்களிக்கும் ரஷிய தேர்தல்

ரஷியாவில் நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன.

Image caption க்ரைமியாவிலுள்ள கருங்கடல் தீபகற்பத்தில் வசிப்போரும் முதல்முறையாக வாக்களிக்கும் ரஷிய தேர்தல்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக ரஷியா, தன்னுடைய பகுதியாக இணைத்து கொண்ட க்ரைமியாவிலுள்ள கருங்கடல் தீபகற்பத்தில் வசிப்போரும் முதல்முறையாக இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

பிரதமர் டிமிட்ரி மெட்வடேவின் தலைமையில் உள்ள ஐக்கிய ரஷிய கட்சி, துமா என்றழைக்கப்படும் 450 இருக்கைகள் கொண்டபேரவையில் அறுதி பெரும்பான்மையை பெற்றிருக்கிறது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption சில பெண் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். ஆனால், தொலைக்காட்சி விவாதங்களில் ஆணாதிக்கம் தான்.

கடந்த தேர்தலின்போது நடைபெற்ற மோசடி காணொளியாக இணையத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டதால் போராட்டங்கள் வெடித்தன.

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் சந்தித்த மிக பெரிய சவாலாக அது அமைந்தது என்றும் இந்த கசப்பான அனுபவத்தை தவிர்க்க கிரம்ளின் ஆர்வமுடன் உள்ளது என்று பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.