பெல்கிரேடில் ஓரினச்சேர்க்கையாளர்கள் பேரணிக்கு பலத்த பாதுகாப்பு

படத்தின் காப்புரிமை Reuters
Image caption பிரைட் பேரணி (கோப்புப்படம்)

இன்று நடைபெறயிருக்கும் வருடாந்தர பிரைட் பேரணியை முன்னிட்டு செர்பியாவின் தலைநகர் பெல்கிரேடில் ஆயிரக்கணக்கான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption பிரைட் பேரணியில் முத்தமிடும் ஆண்கள் (கோப்புப்படம்)

பழமைவாத கிறிஸ்தவ மதிப்பீடுகளுக்கு எதிராக ஓரினச்சேர்க்கை இருப்பதாக கூறுகின்ற வலது சாரி குழுக்களால் கடந்த காலங்களில் இந்த நிகழ்வு மிகுந்த விமர்சனத்திற்கு ஆளாகியிருந்தது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption பிரைட் பேரணியில் பாதுகாப்பு (கோப்புப்படம்)

ஆனால், வேற்றுமைகளில் சகிப்புத்தன்மை போன்ற ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்கு ஒரு நாடு விண்ணப்பிக்க தேவையான மிக முக்கியமான மதிப்பீடுகளை செர்பியா கடைபிடித்து வருவதை இந்த நிகழ்வு காட்டுவதாக பிரைட் பேரணியின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்