பிரான்ஸ்: ஏலத்திற்கு வரும் 2 ஆம் உலகப் போர் டாங்கிகள் மற்றும் விமானங்கள்

நோர்மண்டி டாங்கி அருங்காட்சியகத்தில் இருந்த இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட டாங்கிகள், விமானம் மற்றும் ராணுவ கருவிகள் என மொத்த சேகரிப்புகளையும் ஏலத்தில் விடும் நிகழ்வு பிரெஞ்சு நகரமான கேட்ஸில் நடைபெற உள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நோர்மண்டி டாங்கி அருங்காட்சியகம்

நாஜி ஜெர்மனியர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து வடமேற்கு ஐரோப்பாவை விடுவிக்கும் நோக்கில் நோர்மண்டி கடற்கரைகளில் நேச நாட்டு படைகள் தரையிறங்கினர். அந்நாளை டி டே என்றழைக்கிறார்கள். அப்போது, பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான பொருட்கள் தற்போது ஏலத்தில் விற்கப்பட உள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நோர்மண்டி டாங்கி அருங்காட்சியகம்

பெரும்பாலான டாங்கிகள் மற்றும் வாகனங்கள் சீரமைக்கப்பட்டு இயங்கும் நிலைக்கு மாற்றப்பட்டுள்ளன.

மூன்றாண்டுகளுக்குமுன், இந்த அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நோர்மண்டி டாங்கி அருங்காட்சியகம்

ஆனால், போதுமான பார்வையாளர்களை ஈர்க்கவில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நோர்மண்டி டாங்கி அருங்காட்சியகம்

தன்னுடைய வாழ்வில் 37 ஆண்டுகளாக இந்த பொருட்களை சேகரித்து வந்ததாகவும், பிரெஞ்சு வரி கட்டணத்தை தன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும் அந்த தனியார் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்