பெர்லின் தேர்தல்: ஏங்கெலா மெர்கலின் கட்சி மீண்டெழுமா?

  • 18 செப்டம்பர் 2016

ஜெர்மனியின் தலைநகர் பெர்லினின் புதிய சட்டமன்றத்துக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க, இன்று பெர்லின் நகர மக்கள் வாக்களிக்க உள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஏங்கெலா மெர்கல் (கோப்புப் படம்)

அண்மைய தேர்தலில், குடியேறிகளுக்கு எதிரான வலதுசாரி கட்சியுடன் நடந்த போட்டியில் மக்களின் ஆதரவினை ஏங்கெலா மெர்கலின் கிறிஸ்துவ ஜனநாயக கட்சி இழந்துள்ளதால், அக்கட்சியின் தற்போதைய தேர்தல் செயல் பாடு குறித்து ஆய்வாளர்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாட்டில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான குடியேறிகளை அனுமதிப்பது என்ற முடிவினை கடந்த வருடம் எடுத்ததிலிருந்து ஏங்கெலா மெர்கலின் புகழ் ஜெர்மனியில் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.