மத்திய ஆப்ரிக்காவில் வன்முறை: ஐ.நா., படைகள் விரைகின்றன

  • 18 செப்டம்பர் 2016

மத்திய ஆப்ரிக்க குடியரசில் உள்ள ஐ.நாவின் அமைதி சேவையகம், நாட்டின் ஒரு பகுதியில் போராளிகள் குறைந்தது 20 பேரைக் கொன்ற பகுதிக்கு தனது படைகளை நிறுத்தியுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஐ.நா படைகள் (கோப்புப் படம்)

எண்டிடீட் என்னும் கிராமம் மற்றும் காகா பண்டுரு என்னும் நகரம் ஆகியவற்றில் தனது படைகள் நுழைந்துள்ளன என ஐ.நா., தெரிவித்துள்ளது.

சமீப மாதங்களில் நாட்டில் நடந்த இந்த கொடுமையான தாக்குதலுக்கு ஐ.நா., கண்டனம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலும் முஸ்லிம்களை சேர்ந்த முன்னாள் செலக்கா போராளிகளுக்கும் அவர்களின் முக்கிய எதிரியான பலாக்காவிற்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த கிறித்துவ போராளிகளுக்கும் மோதல்கள் தொடங்கியதில் வெள்ளிக்கிழமையன்று இந்த வன்முறை வெடித்தது.

முன்னாள் செலக்கா போராளிகள், வீடு வீடாகச் சென்று பாதிக்கப்பட்டவர்களை கொன்றனர் என அதிபரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்