தடை செய்யப்பட்ட மருந்துகளை உட்கொள்ள முடியுமா?

தடகள வீரர்கள் மருத்துவ விலக்கு சோதனை சான்றிதழ் பெற்றால், தடை செய்யப்பட்ட பொருட்களை உட்கொள்ள அனுமதிக்கப்படும் நடைமுறைக்கு ஆதரவாக பேசியுள்ளார், உலக தடகள அமைப்பின் தலைவர் செபாஸ்டன் கோ.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption செபாஸ்டன் கோ

சர்வதேச தடகள கூட்டமைப்பு சங்கத்தின் தலைவர் லார்ட் கோ, உலக ஊக்க மருந்து எதிர்ப்பு முகமை பின்பற்றும் நடைமுறையில் மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் அதை முறைகேடாகப் பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது என்பதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மற்றும் முன்னாள் டூர் டி ஃபிரான்ஸ் தொடரின் வெற்றியாளர் ப்ராட்லி விக்கின்ஸ் ஆகியோர் தடைசெய்யப்பட்ட மருந்துகளை எடுத்துக் கொள்ளவதற்கு அனுமதிக்கும் பொருட்டு அது, சிகிச்சைக்கான விலக்கப்பட்ட மருந்துகளாக கொள்ளப்பட்டது என்ற நம்பகமான மருத்துவ தரவுகளை ரஷிய ஹேக்கர்கள் வெளியிட்ட பிறகு அவர் இவ்வாறு பேசியுள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்