சிரியா ராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்திய ஜிகாதிகள்

சிரியாவின் கிழக்கு பகுதியில் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பிற்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்ட சிரியா ராணுவத்தின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என்றும் அதன் விமானி கொல்லப்பட்டார் என்றும் சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சிரிய ராணுவத்தின் விமானம்

கேந்திரிய முக்கியத்துவம் வாய்ந்த டெய்ர் எசோர் விமான நிலையத்திற்கு அருகில் தங்களின் போராளிகள் இந்த தாக்குதலை நடத்தியதாக ஜிகாதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஒரு வாரத்திற்கு முன்பு சிரியா போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்கா மற்றும் ரஷியாவிற்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில் ஐ.எஸ் அமைப்பினர் பங்கு கொள்ளவில்லை.

ஒப்பந்தத்தின் அம்சங்களை நிறைவேற்ற தவறியதாக ரஷியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

அமெரிக்கா மற்றும் ரஷியாவிற்கு இடையேயான ஒத்துழைப்பு, அதிகரித்துவரும் பலவீனமான யுத்த நிறுத்தத்தை சார்ந்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்