சோமாலியாவில் ராணுவ தளபதியை கொன்ற அல் ஷபாப் தீவிரவாதிகள்

கோப்புப்படம் படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

சோமாலியா தலைநகர் மொகதிஷுவில் நடைபெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில், ராணுவ தளபதி ஒருவரும் மற்றும் அவரது பாதுகாவலர்களும் கொல்லப்பட்டனர்.

ராணுவ தளபதி முகமது ஜிமாலே கூபாலேவின் வாகன தொடரணி மீது தற்கொலை குண்டுதாரி ஒருவர் வெடிப்பொருட்கள் நிரப்பிய வாகனத்தை மோதி வெடிக்கச் செய்தார்.

இந்தத் தாக்குதல் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகம் அமைந்திருந்த பகுதி அருகே நடைபெற்றுள்ளது.

இந்த வெடிகுண்டு தாக்குதலை அல் ஷபாப் தீவிரவாதிகள் நடத்தியதாக தெரிவித்துள்ளனர்.

தங்களுக்கு எதிராக தளபதி திட்டம் ஒன்றை வகுத்ததின் விளைவாக இது நடத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்