போதை பொருளை ஒழிக்க இன்னும் ஆறு மாத காலம் அவகாசம் கேட்கும் பிலிப்பின்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோ

போதை பொருளை ஒழிக்கும் தன்னுடைய சர்ச்சைக்குரிய திட்டத்தை இன்னும் ஆறு மாதங்கள் முன்னெடுக்க அவகாசம் வேண்டும் என்று பிலிப்பின்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோ தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பிலிப்பின்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோ

தன்னுடைய தேர்தல் பிரசாரத்தின் போது, தான் அதிபராக பொறுப்பேற்ற உடன் முதல் ஆறு மாதங்களில் போதைப் பொருள் மற்றும் அதுதொடர்பான குற்றங்களை ஒழித்துக் கட்டுவதாக சூளுரைத்திருந்தார்.

ஆனால், தற்போது போதை வர்த்தகத்தில் இத்தனை பேர் ஈடுபட்டிருப்பார்கள் என்பதை தான் உணரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் டுடெர்டோ அதிபராக பொறுப்பேற்றதிலிருந்து, போதை மருந்து குற்றவாளிகள் என சந்தேகிக்கப்பட்ட 3000க்கும் அதிகமானோர் சட்ட விரோதமாக கொல்லப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்