பெர்லின் தேர்தலில் மெர்கலின் கிறிஸ்தவ ஜனநாயக கூட்டணி தோல்வி

படத்தின் காப்புரிமை EPA
Image caption அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேசிய தேர்தல்களுக்கு வலுவான நிலையில் இருப்பதாக எ.எஃப்.டி நம்பிக்கை

ஜெர்மனியின் சான்சலர் ஏங்கெலா மெர்கலின் கிறிஸ்தவ ஜனநாயக கூட்டணியானது, பெர்லின் தேர்தல்களில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தோல்வியை சந்தித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை AP
Image caption பெர்லினின் எஸ்.பி.டி மேயர் மைக்கேல் முல்லரின் அரசியல் பலம் குறைந்துள்ளது

நாட்டின் கூட்டணி அரசிலிருந்து வெளியேறுவது கட்டாயமாகலாம் என்ற அளவுக்கு 18 விழுக்காட்டிற்கு கீழே கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றிய கட்சிகளின் வாக்கு பகிர்வு வீழ்ச்சியடைந்திருக்கிறது.

வலது சாரி குடியேறிகள் எதிர்ப்பு கட்சியான எ.எஃப்.டி 14 விழுக்காடு மக்களின் ஆதரவை வென்றிருக்கிறது. இதனால், பெர்லின் உள்பட மொத்தமுள்ள 16 பிராந்திய நாடாளுமன்றங்களில் 10-இல் அதற்கு பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றிய வேட்பாளர் ஃபிராங்க் ஹென்கலின் பதாகை அகற்றப்படுகிறது

தேசிய தேர்தல்களுக்கு ஓராண்டுக்கு முன்னால் அறிவிக்கப்பட்ட குடியேறிகளை ஏற்றுக்கொள்ளும் மெர்கலின் கொள்கையானது, பொது மக்களிடன் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

பெர்லினிலுள்ள மோசமான பொது சேவைகளால், முன்பே இருந்துவரும் கட்சிகளுக்கு எதிராக உள்ளூர் மக்கள் அதிக கோபமும் கொண்டிருக்கின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்