சிரியா போர் நிறுத்தம் முறிந்ததா, தொடர்கிறதா?

சிரியாவில் போர் நிறுத்தம் முறிந்துவிட்டதாக ராணுவம் அறிவித்துள்ளதை நிலையில், அங்கு போர் நிறுத்தம் குறித்த சந்தேகங்கள் அதிகரித்துள்ளன.

படத்தின் காப்புரிமை AFP
Image caption சிரியா போர் நிறுத்தம் குறித்து குழப்பங்கள் தொடர்கின்றன

ஏழு நாட்களுக்கு முன் தொடங்கிய போர் நிறுத்தத்தை தொடர்ந்து மீறியதாக போராளிகள் மீது சிரியா ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது; அதே குற்றச்சாட்டை போராளிகளின் அமைப்பு சிரியா அரசின் மீது சுமத்தியுள்ளது.

முன்னதாக, தீவிரவாதிகளால் தாக்கப்படும் பட்சத்தில் சிரியா அரசுப் படைகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதிப்பது முட்டாள்தனமானது என ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிரியா போர் நிறுத்தம் பலவீனமாக இருப்பதாகவும் ஆனால் அது இன்னும் அமலில் இருக்கிறது எனவும் அமெரிக்க வெளியுறவு செயலர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்