நியூ யார்க் குண்டு வெடிப்புகள்: தேடப்படும் நபரின் படம் வெளியீடு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நியூ யார்க் குண்டு வெடிப்புகள்: தேடப்படும் நபரின் படம் வெளியீடு

கடந்த சனிக்கிழமை நியூ யார்க் நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பில் தேடப்படும் நபரின் புகைப்படத்தை அமெரிக்க காவல்துறை வெளியிட்டுள்ளது.

அஹ்மட் கான் ரஹாமி எனும் அந்த 28 வயது நபர் நியூ ஜெர்ஸியில் வசிக்கிறார். அங்குள்ள எலிசபெத் ரயில் நிலையத்துக்கு அருகில் காணப்பட்ட குண்டை காவல்துறை ரோபோ ஒன்று செயலிழக்க வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அது வெடித்தது.

இதனிடையே நியூ யார்க் நகர மேயர் ஆண்ட்ரூ க்யூமோ தனது முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, மான்ஹாட்டன் பகுதியில் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் வெளிநாட்டுத் தொடர்புடன் கூடிய பயங்கரவாதச் செயலாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.