தாய்லாந்து நிறுவனத்தை அவமதித்தாக மனித உரிமை ஆர்வலருக்கு தண்டனை

பிரிட்டனின் மனித உரிமை செயற்பாட்டளாரன ஆன்டி ஹால், தாய்லாந்திலுள்ள பழப் பதனீட்டு நிறுவனம் ஒன்றை அவமதித்துள்ளதாக தண்டனை பெற்றுள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption தொழிலாளர் நிலமை பற்றி சர்வதேச கவனத்தை இந்த வழக்கு ஈர்த்துள்ளதால் மகிழ்ச்சி அடைவதாக ஆன்டி ஹால் தெரித்தார்

அபராதம் விதிக்கப்பட்டுள்ள அவர் இடைநிறுத்தப்பட்ட மூன்றாண்டு சிறை தண்டனையும் பெற்றுள்ளார்.

ஃபிண்வாட்ச் என்ற பின்லாந்து செயல்பாட்டு குழுவின் தனிப்பட்ட ஆய்வாளராக இருந்த ஆன்டி ஹால், தாய்லாந்தில் கலனில் அடைத்து விற்கப்படும் அன்னாசிப்பழ பொருட்கள் தயாரிக்கும் மிக பெரிய நிறுவனத்தில் குடியேறி தொழிலாளர்களின் நிலைமை பற்றிய அறிக்கையை தயாரித்திருந்தார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption தாய்லாந்து மக்களாலும், குடியேறி தொழிலாளாகளாலும் ஆன்டி ஹால் ஆதரிக்கப்படுகிறார்

இந்த இயற்கை பழப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் தொழிலாளர்கள் மோசமாக நடத்தப்படுகின்ற குற்றச்சாட்டை மறுத்துவிட்டது.

நீதிமன்றத்திற்கு போவதற்கு முன்னதாக பிபிசியிடம் பேசுகிறபோது, தனக்கு தண்டனை வழங்கப்படுமானால் அது நம்பமுடியாத அநியாயமாக இருக்கும் என்று தெரிவித்த ஆன்டி ஹால், தாயலாந்திலுள்ள குடியேறிகளின் உரிமைகள் தொடர்பாக சர்வதேச கவனத்தை இந்த வழக்கு ஈர்த்துள்ளதற்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்