ஊழல் குறித்து புகாரளித்தால் வெகுமதி: இது பாகிஸ்தானில்

  • 20 செப்டம்பர் 2016

மோசடி மற்றும் லஞ்ச குற்றச்சாட்டுகள் குறித்து தகவல் தருபவர்களுக்கு வெகுமதியளிக்க வழிவகை செய்யும் ஊழல் எதிர்ப்பு சட்டமொன்றை பாகிஸ்தானில் உள்ள மாகாணமொன்று அந்நாட்டில் முதல்முறையாக அறிமுகம் செய்யவுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption பாகிஸ்தான் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள உள்ள ஊழல் எதிர்ப்பு

பொதுத்துறை அலுவலகங்களில் நடக்கும் ஊழல்கள் குறித்து புகார் அளிப்பவர்கள் யார் என்ற தகவலைப் பாதுகாக்கவும், குறிப்பிட்ட மோசடி அல்லது ஊழல் குற்றச்சாட்டில் உள்ளடங்கிய பணத்தில் மூன்றில் ஒரு பங்கினை ஊழல் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதியாக தரவும், ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து தகவல் வெளியிட அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த புதிய சட்டம் வழிவகை செய்கிறது.

ஊழலை கட்டுப்படுத்தவும், பொது மக்களிடமிருந்து வழக்கமாக லஞ்சம் கோரும் அதிகாரிகளை தடுத்து நிறுத்தவும் இச்சட்டம் வழிவகை செய்யும் என இந்த புதிய சட்டத்திற்கு ஆதரவளிப்பவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஆனால், அதே வேளையில், மக்கள் ஒருவர் மீது ஒருவர் வேவு பார்ப்பதை ஊக்குவிக்கும் ஒரு ஆரோக்கியமற்ற கலாசாரத்தை இந்த சட்டம் உருவாக்கிவிடக்கூடும் என்று இப்புதிய சட்டத்திற்கு எதிரானவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்