காங்கோ ஜனநாயக குடியரசில் தொடர் வன்முறை மற்றும் அமைதியின்மை

காங்கோ ஜனநாயக குடியரசில் தொடர் வன்முறை சம்பவங்கள் மற்றும் அமைதியின்மை ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் சமீபத்திய செய்திகள் கூறுகின்றன.

படத்தின் காப்புரிமை GEORGES GOBET/AFP/Getty Images
Image caption காங்கோ ஜனநாயக குடியரசில் அதிபர் ஜோசப் கபிலவுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடக்கின்றன. (கோப்புப்படம்)

இரண்டு எதிர்க்கட்சிகளின் தலைமை அலுவலகங்கள் ஒரே இரவில் கொளுத்தப்பட்டன என்று கூறப்படுகிறது.

அதிபர் ஜோசப் கபிலவுக்கு எதிரான போராட்டங்களின் போது 50க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக திங்களன்று எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

அதிபர் தேர்தலுக்கு ஒரு தேதியை முடிவு செய்யக் கோரி, அமைதியான முறையில் போரட்டம் நடத்தியவர்கள் மீது பாதுகாப்பு படையினர் தோட்டாக்களைப் பயன்படுத்தினர் என்று பிரதான எதிர்க் கட்சிகளின் கூட்டணி குற்றம் சாட்டியுள்ளது.

வன்முறைக்கு காரணம் ஆயுதம் தாங்கிய போராட்டக்காரர்கள் என்று அரசு குற்றம் சாட்டியது . மேலும், இந்த வன்செயல்களில் மூன்று போலீசார் உட்பட - 17 பேர் இறந்தனர் என்றும் அது கூறியது.