மத்திய தரைக் கடலை கடக்கும் குடியேறிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

மத்திய தரைக் கடலைக் கடந்து ஐரோப்பாவிற்கு செல்லும் குடியேறிகளின் எண்ணிக்கையில் தெளிவான வீழ்ச்சி காணப்படுகிறது என்று சமீபத்திய கணக்குகள் சுட்டிக்காட்டுகின்றன.

படத்தின் காப்புரிமை IAKOVOS HATZISTAVROU/AFP/Getty Images
Image caption மத்திய தரைக் கடலை கடந்து இருந்து ஐரோப்பாவிற்கு செல்லும் குடியேறிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்படுகிறது என்று குடியேறிகளுக்கான சர்வதேச அலுவலகம் கூறுகிறது. குழந்தைகள் தற்காலிக முகாமிற்கு அழைத்துச் செல்லப்படும் காட்சி. (கோப்புப்படம்)

குடியேறிகளுக்கான சர்வதேச அலுவலகம், இந்த ஆண்டு 3 லட்சம் மக்கள் மத்திய தரைக் கடலை கடந்துள்ளனர் என்று கூறுகிறது. கடந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்த எண்ணிக்கையானது அரை மில்லியனுக்கும் அதிகமாக இருந்தது என்று அது தெரிவித்துள்ளது.

பலர் கிரீஸ் நாட்டிற்கு இன்னும் முதலில் வருகின்றனர். ஆனால் கடந்த ஆண்டோடு ஒப்பிடும் போது அவர்களின் எண்ணிக்கையானது பாதி அளவுக்கும் குறைவானதாக உள்ளது.

ஆனால் இறப்புகளின் எண்ணிக்கையானது கடந்த ஆண்டை போலவே அதிகமானதாக நீடிக்கிறது. கிட்டத்தட்ட 3,000 பேர் இந்த ஆண்டு கொல்லப்பட்டுள்ளார். கடந்த ஆண்டின் எண்ணிக்கை 3200 இருந்தது.