முன்னாள் செர்பிய ஆயுதக் குழு தளபதி மீது போர் குற்ற விசாரணை

முன்னாள் செர்பிய ஆயுதக் குழு தளபதி, 1990 ஆம் ஆண்டில் நாட்டின் விடுதலைக்கான போரில் போர் குற்றங்கள் புரிந்ததாக கூறப்படும் வழக்கு விசாரணையில் க்ரோயேஷாவில் இன்று ஆஜராக உள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption "கேப்டன் டிராகன்" என்று அழைக்கப்பட்ட ட்ராகன் வசீல்கோவிச்

ஒரு சமயத்தில் "கேப்டன் டிராகன்" என்று அழைக்கப்பட்ட ட்ராகன் வசீல்கோவிச், ஆஸ்திரேலியாவில் 2006 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்; ஆனால் பத்து வருட சட்டப்போராட்டத்திற்கு பிறகு கடந்த வருடம்தான் அவர் க்ரோயேஷாவிற்கு நாடு கடத்தப்பட்டார்.

பொது மக்கள் மற்றும் போர்க் கைதிகளை துன்புறுத்துவதும் கொல்வதும், 61 வயதாகும் அவரின் மேற்பார்வையில் தான் நடைபெற்றது என்று வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

செர்பியாவில் ஒரு நாயகனாக பார்க்கப்படும் வசீல்கோவிச், தான் போர்க் குற்றம் புரிந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

முன்னாள் யுகோஸ்லேவியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றதாக க்ரோயோஷா அறிவித்ததையடுத்து, பெல்க்ரேட் ஆதரவு செர்பிய போராளிகளுடனான 1991-1995 போர் தொடங்கியது.

அப்போரில் 20,000 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.