சிரியா போர் நிறுத்த ஒப்பந்தத்தை காப்பாற்ற அமெரிக்கா மற்றும் ரஷ்யா தீவிரம்

  • 20 செப்டம்பர் 2016

சிரியாவின் பல பகுதிகளிலும் வன்முறை சம்பவங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஜான் கெர்ரி மற்றும் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லாவ்ரோவ் ஆகிய இருவரும் சிரியாவில் அமல்படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து நியூ யார்க்கில் சந்தித்து விவாதிக்கவுள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஜான் கெர்ரி மற்றும் செர்கி லாவ்ரோவ் (கோப்புப் படம்)

தாங்கள் மத்தியஸ்தம் செய்து உருவாக்கிய போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது ஆபத்தில் இருப்பதால், அதனை காப்பாற்றும் முயற்சியில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் ஈடுபட்டுள்ளன.

சிரியாவின் அலெப்போ நகரில் இரவு முழுவதும் வான் வழி தாக்குதல்கள் நடந்து வரும் வேளையில், அங்கு 30-க்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டதாக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, அதிகளவில் ஷெல் குண்டுத்தாக்குதல்கள் நடத்தி சிரியா போராளிகள் பதிலடி தந்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய தலைப்புகள்