யானை தந்தங்களை விற்பதற்கு உள்ள தடையை நீக்கக்கூடாது என போட்ஸ்வானா கோரிக்கை

உலகின் பெரிய அளவிலான யானைகளின் எண்ணிக்கையை கொண்டுள்ள போட்ஸ்வானா தனது அண்டை நாட்டினர் யானை தந்தங்களை விற்பதற்கு உள்ள தடையை நீக்குவதற்கான முயற்சிகளை ஆதரிக்காது என்று தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Cameron Spencer/Getty Images
Image caption உலகின் பெரிய அளவிலான யானைகளின் எண்ணிக்கையை போட்ஸ்வானா கொண்டுள்ளது. இங்கு யானைகளின் எண்ணிக்கை சமீபத்திய ஆண்டுகளில் 30 சதமாக குறைந்துள்ளது. போட்ஸ்வானா காடுகளில் உள்ள யானைகள் (கோப்புப்படம்)

இந்த வாரத்தின் இறுதியில், சர்வதேச வனஉயிரிகள் தொடர்பான மாநாட்டில், யானை தந்தங்களை விற்கும் உரிமை தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது. அதில் தென்னாப்ரிக்கா, நமீபியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் யானைத் தந்தங்களை விற்பதற்கான உரிமை வேண்டும் என வாதிடவுள்ளன.

பெருமளவில், யானைகளின் எண்ணிக்கையை கொண்டுள்ள நாடுகள், யானைகளை வேட்டையாடுவடுவதால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளை போல நடத்தப்பட கூடாது என்று வாதிட்டனர்.

ஆனால் பல பிற ஆப்பிரிக்க நாடுகள் கட்டுப்பாடுகளை கடுமையாக வேண்டும் என்று விரும்புகின்றனர்.

சமீப ஆண்டுகளில், முக்கியமாக, வேடையாடுவதன் காரணமாக, ஆப்பிரிக்காவின் யானை எண்ணிக்கை 30 சதமாக சரிந்துள்ளது.