யெமென் போர்: பட்டினிச் சாவின் விளிம்பில் சிறார்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

யெமென் போர்: பட்டினிச் சாவின் விளிம்பில் சிறார்கள்

எச்சரிக்கை:

இந்தக் காணொளியில் துவக்கம் முதலே மனச்சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய காட்சிகள் உள்ளன

யெமெனில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போர் அந்நாட்டை பஞ்சத்தின் விளிம்புக்கு தள்ளியுள்ளது.

அங்கு ஆட்சியில் இருந்த அரசை கிளர்ச்சியார்கள் அகற்றினார்கள். பின்னர் கிளர்ச்சியாளர்களை விரட்டும் நோக்கில், சவுதி தலைமையில் பிராந்திய மற்றும் மேற்குலக நாடுகளின் ஆதரவிலான கூட்டுப்படைகள் அங்கு குண்டு வீச்சுகளை நடத்தி வருகின்றன.

அங்கு பதினெட்டு மாதங்களாக நடைபெறும் மோதலால் சுமார் இருபது லட்சம்பேர் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் பதினைந்து லட்சம் பேர் சிறார்கள்.

பிபிசி அரபு மொழி சேவையின் நவாக் அல் மக்ஹாஃபியின் சிறப்புக் காணொளி.