சிரியா தாக்குதல்: அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே கசப்பான கருத்து மோதல்

சிரியாவில் உதவி பொருட்களை எடுத்து சென்ற வாகனத் தொடரணியின் மீது நடந்த தாக்குதலால் எழுந்த மோதல்கள் குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் கசப்புடன் குற்றச்சாட்டுகளைப் பரிமாறிக் கொண்டன.

Image caption ஜான் கெர்ரி மற்றும் செர்கி லாவ்ரோவ் (கோப்புப் படம்)

உதவி பொருட்களை எடுத்து சென்ற இந்த வாகனத் தொடரணியின் மீது ரஷ்யாதான் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது என்று அமெரிக்கா கருதுகிறது. ஆனால், இதனை ரஷ்யா மறுத்துள்ளது.

இத்தாக்குதல் குறித்து ரஷ்யாவின் விளக்கங்கள் மாறி வருவது குறித்து, ராஜிய உறவுகள் தொடர்பான கட்டுப்பாடுகளை தூக்கி எறிந்து, ரஷ்யாவின் விளக்கங்கள் குறித்து அமெரிக்க அரசின் வெளியுறவுச் செயலாளர் ஜான் கெர்ரி கேலி செய்துள்ளார்.

இத்தாக்குதல் குறித்து எழுந்த உணர்வுரீதியான கருத்துக்களை வெளிப்படுத்தவேண்டாம் என்று அறிவுறுத்திய, ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லாவ்ரோவ் சாத்தியமாகக்கூடிய பல விளக்கங்களை பட்டியலிட்டு வாதிட்டுள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்