இராக்: அமெரிக்க படை துருப்புகள் மீது வீசப்பட்ட ஷெல் குண்டில் ரசாயன பொருளா?

அமெரிக்க படை துருப்புகள் தங்கியிருந்த இராக் ராணுவ தளம் மீது வீசப்பட்ட ஷெல் குண்டில், ஏதேனும் ரசாயன ஆயுதம் உள்ளதா என்று அமெரிக்க ராணுவம் விசாரணை செய்து வருகிறது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption மொசூல் ராணுவ தளம்

இது குறித்து நடத்தப்பட்ட ஆரம்ப சோதனை ஒன்றில், சல்ஃபர் மஸ்டர்டு எனப்படும் கடுகு வாயு வேதிப்பொருளின் எச்சம் இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், இரண்டாவது சோதனையில் மேற்கூறிய வேதிப்பொருள் கண்டறியப்படவில்லை.

இராக்கின் மொசூல் நகரின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் விமான தளத்தின் மீது இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ். அமைப்பு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் யாரும் காயமடையவில்லை.

மேலும், சோதனை செய்வதற்காக இந்த ஷெல் குண்டுகளை சேகரித்த படை வீரர் ரசாயன வெளிப்பாடுகளால் பாதிப்படைந்ததாக எந்த அறிகுறியும் தென்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்