உலகில் உள்ள மக்களுக்கும், ஆஃப்ரிக்காவுக்கும் நெருங்கிய தொடர்பு: ஆய்வறிஞர்கள் கண்டுபிடிப்பு

  • 22 செப்டம்பர் 2016

ஆஃப்ரிக்காவுக்கு வெளியே உள்ள மனிதர்களின் மரபணு ரீதியான மூதாதையர்களை அந்த கண்டத்திலிருந்து மனித கூட்டம் ஒன்று வெளியேறிய ஒரு சம்பவத்துடன் தொடர்பு படுத்தலாம் என்ற வாதத்தை மேலும் ஆதரிக்கும் விதமாக புதிய ஆதாரங்களை ஆய்வறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

'நேச்சர்' என்ற இயற்கை தொடர்பான இதழில் இரண்டு ஆய்வுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதில், உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான மக்களிடமிருந்து மரபணுத் தொகுதி சேகரிக்கப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

40,000 லிருந்து 80,000 ஆண்டுகளுக்குமுன் ஆஃப்ரிக்காவை விட்டு வெளியேறிய ஒரு மக்கள் தொகையினருடன் இந்த மரபணுக்கள் ஒத்துப் போவதாக இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

எனினும், அதே 'நேச்சர்' இதழில் வெளியான மூன்றாவது ஆய்வு ஒன்று, பப்புவா நியு கினியாவில் நடைபெற்ற குறைந்தது ஒரு முந்தைய ஆஃப்ரிக்க இடம்பெயர்வில் இருந்து எஞ்சி உயிர்ப்புடன் இருக்கும் மனித டி என் ஏவின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய தலைப்புகள்