ஐ.எஸ்.பிடியில் உள்ள அல் -ஷிர்க்கத் நகரத்தின் மையத்தில் நுழைந்தன இராக் படைகள்

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பினரின் பிடியில் இருந்து வரும், வடக்கு நகரமான அல் -ஷிர்க்கத்தின் மையத்திற்குச் சண்டையிட்டு இராக் அரச படைகள் சென்றடைந்தாகக் கூறுகின்றன.

படத்தின் காப்புரிமை MOADH AL-DULAIMI/AFP/Getty Images
Image caption ஐ.எஸ்.பிடியில் உள்ள அல் -ஷிர்க்கத் நகரத்தின் மையத்தில் நுழைந்தது இராக் அரச படைகள். இராக் அரசின் கொடி(கோப்புப்படம்)

அரச தொலைக்காட்சி, உள்ளூர் சபையின் தலைமையகத்தில் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது , 20க்கும் மேற்பட்ட ஐ.எஸ். போராளிகள் கொல்லப்பட்டனர் என்றும் தெரிவித்தது

அல் -ஷிர்க்கத் ஒரு கேந்திர முக்கியத்துவம் பெற்றுள்ள நகரம். ஏனெனில், மோசூல் நகரத்தில் ஒரு பெரிய போர் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அந்த நகரம் தான், தேவைப்படும் வழங்கல் பாதைகளை அருகில் கொண்டுள்ள நகரம் ஆகும்.