எகிப்து கடற்பகுதியில் மூழ்கிய படகின் சிப்பந்திகள் 4 பேர் கைது

புதன்கிழமை அன்று, எகிப்து கடற்பகுதிக்கு அப்பால் மத்திய தரைக்கடல் பகுதியில் மோதிய படகில் இருந்த நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக அஞ்சப்படும் நிலையில், அப்படகின் சிப்பந்திகள் நான்கு பேரை எகிப்து அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை MOHAMED EL-SHAHED/AFP/Getty Images
Image caption எகிப்து கடற்பகுதியில் மூழ்கிய படகை செலுத்திய நான்கு உறுப்பினர்களை கைதுசெய்துள்ளனர். மீட்டுப் பணியில் எகிப்த் அரசாங்க அதிகாரிகள்

அந்த குழுவை மனிதப் படுகொலை மற்றும் மக்களை கடத்தியதாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்துள்ளனர். இந்த குழுவை சேர்ந்த மற்ற உறுப்பினர்களை தேடிவருகின்றனர்.

உயிர்பிழைத்தவர்கள் பேசுகையில், கிட்டத்தட்ட 550 பேர் அந்தப் படகில் இருந்ததாகவும், அந்த படகு இத்தாலிக்கு செல்வதற்காக, ரொசெட்டா துறைமுகத்தில் காத்திருந்தபோது, அதில் பலர் படகில் நசுங்கிக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.

வெறும் 170 நபர்கள் மட்டும் தான் மீட்கப்பட்டுள்ளார்.